கறிவேப்பிலைப் பொடி – செய்முறை – சமையல் பகுதி – Curry leaf Powder – Recipe
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை = 1/2 கிலோகிராம்
- கடலைப் பருப்பு = 100 கிராம்
- உளுத்தம் பருப்பு = 50 கிராம்
- உடைத்த கடலை = 50 கிராம்
- துவரம் பருப்பு = 2 மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாய் = 8 (அல்லது) 10 காரம் அதிகம் சேர்ப்பவர்கள் 10 மிளகாய்சேர்க்கலாம்.
- பெருங்காயத்தூள் = சிறிது
- எண்ணெய் = சிறிது
- உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை
- கறிவேப்பிலையை நன்றாகக் கழுவி காயவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பின் அடுப்பை பற்றவைத்து அதில் பாத்திரத்தை வைத்து, க.பருப்பு , உ.பருப்பு, து.பருப்பு, காய்ந்த மிளகாய், இவற்றை எல்லாம் அதில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து தனியே எடுக்கவும்.
- கறிவேப்பிலையையும் சிறிது எண்ணெய்விட்டு கருகாமல் வறுத்து எடுக்கவும்.
- முதலில் காய்ந்த மிளகாயையும், பருப்புவகைகளையும் அதனுடன் உ.கடலையையும் மிக்சியில் போட்டு பொடி செய்யவேண்டும்.
- அதனுடன் உப்பையும் கறிவேப்பிலையையும் பெருங்காயத்தூளையும் சேர்த்துப் பொடிசெய்து கிளறி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது மணமுள்ள கறிவேப்பிலைப் பொடி தயார். சோறுடன் கறிவேப்பிலைப் பொடியை போட்டு நெய் ஊற்றி சாப்பிடலாம். இதை சாப்பிட்டால் தலை முடி உதிர்வது குறையும். இதில் இரும்பு சத்து உள்ளது.