சிறிய வெங்காய ரசம்-செய்முறை – சமையல் – மகளிர்ப்பகுதி
சிறிய வெங்காய ரசம் – செய்முறை – சமையல் – மகளிர்ப்பகுதி
தேவையான பொருட்கள்
- சிறிய வெங்காயம் 150 கிராம்
- புளி = 25 கிராம்
- காய்ந்த மிளகாய் = 3
- சமையல் எண்ணெய் = 50 கிராம்
- கடுகு = ஒரு தேக்கரண்டி
- மஞ்சள்தூள் = சிறிதளவு
- பெருங்காயத்தூள் = சிறிதளவு
- உப்பு = தேவைக்கேற்ப
- கறிவேப்பிலை = சிறிதளவு
செய்முறை
- முதலில் வெங்காயத்தை தோலுரித்து சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
- புளியை தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
- பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்தவுடன் மிளகாயைக் காம்பு கிள்ளி முழுசாக போடவும்.
- அதனுடன் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும் .
- கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்
- வதங்கிய பின் புளியைக் கரைத்து அதில் ஊற்றவும்.
- புளிப்பிற்குத் தகுந்த தண்ணீர் ஊற்றவும்.
- உப்பு சரியான அளவு போட்டு மஞ்சள் தூள் பெருங்காயத் தூளையும் போட்டு நன்றாகக் கொதித்த பின் இறக்கி விடவும்.