பருப்பு ரசம் ரசம் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு = 2 மேசைக்கரண்டி
- தக்காளி = 3
- பச்சை மிளகாய் = 1
- பூண்டு = 5 பற்கள்
- காய்ந்த மிளகாய் = 3
- பெருங்காயத்தூள் = 1/4 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் = சிறிது
- கறிவேப்பிலை = சிறிது
- கொத்தமல்லித்தழை = சிறிது
- புளி = சிறிதளவு
- ரசப்பொடி = இரண்டு மேசைக்கரண்டி
- எண்ணெய்= சிறிதளவு
- கடுகு = சிறிதளவு
- உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் துவரம்பருப்பை கழுவி வேக வைக்க வேண்டும்
- பருப்பு அரை பதமாக வந்தவுடன், பூண்டு, தக்காளியை அரைத்து அதனுடன் வேக விடவும்.
- பருப்பு நன்றாக வெந்தவுடன் அதை இறக்கி ஆறவைத்து பின், அதனுடன் பச்சை மிளகாயும் சேர்த்து அவற்றை நன்றாக மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
- பின் கரைத்த புளியுடன் புளிப்பிற்கு தகுந்த தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் அரைத்த பருப்பு கலவையைக் கலந்து கொள்ளவும் .
- மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி இவற்றையெல்லாம் கலக்கிக் வைக்கவும்.
- பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்தவுடன் காய்ந்த மிளகாயைக் காம்பு கிள்ளி அதில் போடவும் .
- அடுப்பை மிதமாக எரியவிடவும்.
- கடுகு கறிவேப்பிலை போட்டு கிளறி விட்டு இறக்கி கலக்கிவைத்த ரசத்தை அதில் ஊற்றவும்.
- ரசம் நுரையாக வரும்போது இறக்கி வைத்து அதில் கொத்தமல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு மூடி விடவும்.
- இப்போது மண்முள்ள பருப்பு ரசம் தயார்.
Be the first to comment