குருவிரொட்டி இணைய இதழ்

பருப்பு ரசம் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

பருப்பு ரசம் ரசம் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. முதலில் துவரம்பருப்பை கழுவி வேக வைக்க வேண்டும்
  2. பருப்பு அரை பதமாக வந்தவுடன், பூண்டு, தக்காளியை அரைத்து அதனுடன் வேக விடவும்.
  3. பருப்பு நன்றாக வெந்தவுடன் அதை இறக்கி ஆறவைத்து பின், அதனுடன் பச்சை மிளகாயும் சேர்த்து அவற்றை நன்றாக மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். 
  4. சிறிதளவு தண்ணீர் சேர்த்து புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
  5. பின் கரைத்த புளியுடன் புளிப்பிற்கு தகுந்த தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் அரைத்த பருப்பு கலவையைக் கலந்து கொள்ளவும் .
  6. மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி இவற்றையெல்லாம் கலக்கிக் வைக்கவும்.
  7. பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  8. எண்ணெய் காய்ந்தவுடன் காய்ந்த மிளகாயைக் காம்பு கிள்ளி அதில் போடவும் .
  9. அடுப்பை மிதமாக எரியவிடவும்.
  10. கடுகு கறிவேப்பிலை போட்டு கிளறி விட்டு இறக்கி கலக்கிவைத்த ரசத்தை அதில் ஊற்றவும்.
  11. ரசம் நுரையாக வரும்போது இறக்கி வைத்து அதில் கொத்தமல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு மூடி விடவும்.
  12. இப்போது மண்முள்ள பருப்பு ரசம் தயார்.