குருவிரொட்டி இணைய இதழ்

காரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe


காரப் பணியாரம் – செய்முறை – சமையல் பகுதி  – Recipe

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. அரிசியை தனியாக ஊறவைத்துக்கொள்ளவும். உ.பருப்பையும் வெந்தயத்தையும் ஒன்றாக ஊறவைக்கவும்.
  2. பின் அரிசியை தனியாகவும், உ.பருப்பு மற்றும் வெந்தயக் கலவையை பிறகு தனியாகவும், அரைத்து பின் இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றைப் போட்டு கலக்கிவைக்கவும்.
  3. மாவு கொஞ்சம் புளித்தவுடன் வெங்காயம், ப.மிளகாய் இவற்றை அரிந்து அதில் போடவும்.
  4. பின் அடுப்பை பற்றவைத்து குழிப் பணியார சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெயை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் மாவை கரண்டியால் எடுத்து கொஞ்சமாக குழிகளில் ஊற்றவும்.
  5. பின் அதை சிறிய கம்பியால் திருப்பி போடவும். நன்றாக சிவந்தவுடன் எடுக்கவும்.

இப்போது சுவையான காரப் பணியாரம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள புதினா துவையல் நன்றாக இருக்கும்.