குருவிரொட்டி இணைய இதழ்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி


முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் அரிந்து கொள்ளவும்.
  2. தேங்காயையும் பூண்டையும் ஒன்றாக அரைத்து வைக்கவும்.
  3. முருங்கைக்காயை சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
  4. பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி, அரிந்து வைத்த காய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.
  5. முருங்கைக்காய் கொஞ்சம் வெந்தவுடன், சீரகத்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவற்றுடன் அரைத்த தேங்காயைச் சேர்த்து, வெந்து கொண்டிருக்கும் காயில் போட்டு கிளறிவிடவும்.
  6. அதனுடன் சோம்பையும், கறிவேப்பிலையையும் போடவும்.
  7. இறக்கி வைக்கும் போது எலுமிச்சை சாறையும் மல்லித் தழையையும் போட்டு சரிபார்த்து இறக்கி வைக்கவும்.

இப்போது சூடான மற்றும் சுவையான முருங்கைக்காய் சூப் தயார். இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.