குருவிரொட்டி இணைய இதழ்

தக்காளி சூப் – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

தக்காளி சூப் – சமையல் பகுதி – Tomato Soup


தேவையான பொருட்கள்



செய்முறை

  1. முதலில் தக்காளியை நன்றாக கழுவி, பின் சிறிய துண்டுகளாக அரிந்து எடுத்துக்கொள்ளவும். 
  2. ஒரு சிறிய கோப்பையில் தண்ணீர் ஊற்றி, சோள மாவை அதில் போட்டு கட்டி கட்டியாக வராதவாறு, நன்றாகக் கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பை பற்றவைத்து அதில் பாத்திரத்தை வைக்கவும்.  அதில் அரிந்து வைத்த தக்காளியைப் போட்டு  தண்ணீர் ஊற்றி, அதனுடன் உப்பைச் சேர்த்து வேகவிடவும். 
  4. தக்காளி வெந்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்பு, மஞ்சள் தூள், அரிந்த பச்சை மிளகாய் மற்றும் கரைத்த சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து, பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  5. பின் நன்றாகக் கொதித்தவுடன், ஏலக்காயைப் பொடியாக்கி, அதில் போடவும்.
  6. சில நிமிடங்கள் கழித்து பாத்திரத்தை இறக்கி வைக்கும்போது, கொத்தமல்லித் தழையை பொடியாக அரிந்து அதில் போட்டு இறக்கி வைக்கவும்.

இப்போது சூடான மற்றும் சுவையான தக்காளி சூப் தயார்.