தேங்காய் மிட்டாய் – செய்முறை – சமையல் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe
தேவையான பொருட்கள்
- தேங்காய் முற்றியது = 1
- சர்க்கரை = 300 கிராம்
- ஏலக்காய் = 2
- நிறப்பொடி அல்லது மஞ்சள்தூள் = சிறிது (நிறம் தேவைப்பட்டால்)
செய்முறை
- தேங்காயை உடைத்து, சிறு துண்டுகள் விழாதவாறு, துருவி பூவாக எடுத்துக்கொள்ளவும்.
- தேங்காய்ப்பூவை 1 கோப்பை (கப்) அல்லது குவளையில் (டம்ளர்) அளந்து எடுக்கவும். ஒரு கோப்பை தேங்காய் பூவுக்கு 2 மடங்கு சர்க்கரையை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- பின் அடுப்பைப் பற்றவைத்து அதில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய்த்துருவலை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். குறிப்பு: அடுப்பை மெதுவாக எரியவிட்டு தேங்காய்த் துருவல்கள் கருகாமல் வறுக்க வேண்டும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையை அதில் போட்டு சர்க்கரை நனையும் அளவிற்கு சிறிது தண்ணீர்விட்டு கிளறவேண்டும். அதனுடன் நிறப்பொடியையும் போடவும். சர்க்கரை நன்றாகக் கரைந்து வரும்போது தேங்காய் பூவையும் சிறிது, சிறிதாக போட்டுகிளறிக்கொண்டே இருக்கவும்.
- சர்க்கரை பொங்கி அடங்கிய பின் அதை இறக்கி, அகலமான தட்டில் சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவி அதில் கொட்டி ஆற வைக்கவும்.
- பின் கத்தியால் சிறு சதுரம் அல்லது செவ்வக வடிவ கேக்குகளாக வெட்டி வைக்கவும்.
இப்போது இனிமையான தேங்காய் மிட்டாய் (தேங்காய் பர்ஃபி – Coconut Burfi / Candy) தயார். இது உண்ண மிகவும் சுவையாக இருக்கும்.
Be the first to comment