குருவிரொட்டி இணைய இதழ்

தேங்காய் மிட்டாய் – செய்முறை – மகளிர்ப் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe

தேங்காய் மிட்டாய் – செய்முறை – சமையல் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe


தேவையான பொருட்கள்



செய்முறை

  1.  தேங்காயை உடைத்து, சிறு துண்டுகள் விழாதவாறு, துருவி பூவாக எடுத்துக்கொள்ளவும்.
  2. தேங்காய்ப்பூவை 1 கோப்பை (கப்) அல்லது குவளையில் (டம்ளர்) அளந்து எடுக்கவும். ஒரு கோப்பை தேங்காய் பூவுக்கு 2 மடங்கு சர்க்கரையை எடுத்து தனியாக  வைத்துக்கொள்ளவும்.
  3. பின் அடுப்பைப் பற்றவைத்து அதில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து  அதில் தேங்காய்த்துருவலை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். குறிப்பு: அடுப்பை மெதுவாக எரியவிட்டு தேங்காய்த் துருவல்கள் கருகாமல் வறுக்க வேண்டும்.
  4. பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையை அதில் போட்டு சர்க்கரை நனையும் அளவிற்கு சிறிது தண்ணீர்விட்டு கிளறவேண்டும். அதனுடன் நிறப்பொடியையும் போடவும். சர்க்கரை நன்றாகக் கரைந்து வரும்போது  தேங்காய் பூவையும் சிறிது, சிறிதாக போட்டுகிளறிக்கொண்டே இருக்கவும்.
  5. சர்க்கரை பொங்கி அடங்கிய பின் அதை இறக்கி, அகலமான தட்டில் சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவி அதில் கொட்டி ஆற வைக்கவும்.
  6. பின் கத்தியால் சிறு சதுரம் அல்லது செவ்வக வடிவ கேக்குகளாக வெட்டி வைக்கவும்.

இப்போது இனிமையான தேங்காய் மிட்டாய் (தேங்காய் பர்ஃபி – Coconut Burfi / Candy) தயார். இது உண்ண மிகவும் சுவையாக இருக்கும்.