குருவிரொட்டி இணைய இதழ்

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

கமர்க்கட்டு செய்வதற்கு மிகவும் எளிது. ஆனால் மிகவும் சுவையானது. இது சிறியவர்களும் பெரியவர்களும் விரும்பி உண்ணும் பழமை வாய்ந்த மிட்டாய் / இனிப்பு வகைகளில் ஒன்று. பெரியவர்கள் இதை உண்ணும்போது, அவர்களின் குழந்தைப்பருவத்திற்கே பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடும்.

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. முதலில் தேங்காயைச் சிறு சிறு துண்டுகளாக அரிந்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் பொடி செய்து எடுக்கவும்.
  2. பின் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விட வேண்டும்.
  3. தேங்காய்ப் பொடியை பாத்திரத்தில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. வெல்லத்தைப் பொடி செய்து கொள்ளவும். பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தைப் போட்டு கிளறவும். வெல்லம் கரைந்து கொஞ்சம் கெட்டியானவுடன் வறுத்த தேங்காய்ப் பொடியையும், அதில் போட்டு நன்றாகக் கிளறவும்.
  5. கெட்டியான பதம் வந்தவுடன், பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி அகலமான தட்டில் கொட்டி 5 நிமிடம் ஆற விடவும்.
  6. பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  7. சிறுது நேரத்தில் கமர்க்கட்டு நன்றாக கெட்டியாகி விடும்.

இப்போது சுவை மிக்க கமர்க்கட்டு தயார்.