தனியா துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி
தேவையான பொருட்கள்
- தனியா = 3 மேசைக்கரண்டி
- தேங்காய் = 2 துண்டு
- வெங்காயம் = 1
- புளி = 1 சுளை
- காய்ந்த மிளகாய் = 2
- எண்ணெய் =1/2 மேசைக்கரண்டி
- சமையல் உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை
- மேற்கூறிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும்.
- பின் உப்பு சேர்த்து, மின் அரைவை எந்திரத்தில் (மிக்சியில்) போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இப்போது மணம் மற்றும் சுவையுடன் கூடிய தனியா துவையல் தயார்.