குருவிரொட்டி இணைய இதழ்

பெரிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் – சமையல் குறிப்பு – Gooseberry-Garlic Thick Chutney – Recipe

பெரிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Gooseberry-Garlic Thick Chutney – Recipe

தேவையான பொருட்கள்


செய்முறை

  1. முதலில் நெல்லிக்காயை நன்றாகக் கழுவி, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. பின் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாயையும், பூண்டையும் அதில் போட்டு வதக்கவும். பூண்டு பொன் நிறமாக வந்தவுடன்  இறக்கி வைக்கவேண்டும். 
  3. நெல்லிக்காயை சிறிய குக்கரில் (அல்லது) இட்லி பாத்திர தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பிறகு, வேகவைத்த நெல்லிக்காயை 5 நிமிடம் ஒரு தட்டில் ஆறவைக்கவும்.
  4. பின் வதக்கிவைத்த பூண்டு, மிளகாய் இவற்றை மின் அரைவை எந்திரத்தில் (மிக்சியில்) போட்டு சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். அதனுடன் நெல்லிக்காயை போட்டு இலேசாக அரைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பை பற்றவைத்து, பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும்.  எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போடவும். கடுகு வெடிக்கும் போது மிக்சியில் அரைத்த நெல்லிக்காய் விழுதை அதில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் சீரகத்தூள், வெந்தயத்தூள், பெருங்காயத்தூள் இவற்றை போட்டு இறக்கி வைத்து, எலுமிச்சம் பழச்சாறை ஊற்றி எடுத்து வைக்கவும் . 

இப்போது மணம் மற்றும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் தயார்.   இது சாதத்திற்கும், இட்லி மற்றும் தோசைக்கும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.