முருங்கைக் கீரைத் துவையல் – சமையல் பகுதி – Drumstick Leaves Thick Chutney
தேவையான பொருட்கள்
- முருங்கைக்கீரை = ஒரு கைப்பிடி அளவு
- கடலைப் பருப்பு = 3 மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாய் = 3
- புளி = ஒரு சுளை
- பூண்டு = 2 பற்கள்
- துவரம்பருப்பு = 1 மேசைக்கரண்டி
- எண்ணெய் = 2 மேசைக்கரண்டி (கீரை வதக்குவதற்காக)
- தேவைக்கேற்ப உப்பு.
செய்முறை
- முதலில் முருங்கைக் கீரையை உருவி 1/2 மணி நேரம் ஒரு தட்டில் உலர வைக்கவும்.
- பின் அடுப்பை பற்றவைத்து எண்ணெய் ஊற்றி, அடுப்பை மெதுவாக எரியவிடவும்.
- பின் முருங்கைக் கீரை, துவரம்பருப்பு , மிளகாய் மற்றும் கடலைப்பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாக எண்ணெயில் போட்டு கருகிவிடாதபடி நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
- சிறிது நேரம் ஆறவைத்த பின் அவற்றை மின் அரைவை எந்திரத்தில் (மிக்ஸியில்) போட்டு அதனுடன் புளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது சுவையான, சத்து மிக்க முருங்கைக்கீரைத் துவையல் தயார்.