வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி – மகளிர் பகுதி
தேவையான பொருட்கள்
- காய்ந்த மிளகாய் = பெரியதாக இருந்தால் 8 அல்லது, சிறியதாக இருந்தால் 10
- வெங்காயம் = 2 (சிறிய அளவாகப் பார்த்து எடுத்துக் கொள்ளவும்)
- புளி = சிறிதளவு
- உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை
- மிளகாய், வெங்காயம், புளி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும். குறிப்பு: தண்ணீர் மிகவும் குறைவாக ஊற்றவும்.
- தேவைப்படின் எண்ணெய், கடுகு போட்டு தாளிக்கவும். சுவை கூடுதலாக இருக்கும்.
Be the first to comment