உருளைக்கிழங்கு சாதம் – பல்வகை சாதம் –சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Potato Rice – Variety Rice – Recipe
தேவையான பொருட்கள்
- உருளை கிழங்கு = 1/4 கிலோ
- பச்சரிசி (ப. அரிசி) = 1/2 கிலோ
- கறிமசாலா பட்டை = சிறிய துண்டு
- மஞ்சள் தூள் = 1 சிட்டிகை
- தனி மிளகாய்த்தூள் = 1 மேசைக்கரண்டி
- தனியாத்தூள் = 1 மேசைக்கரண்டி
- ப.மிளகாய் = 2
- கறிவேப்பிலை = கொஞ்சம்
- சோம்பு = 1/2 மேசைக்கரண்டி
- ஏலக்காய் = 2
- சீரகத்துள் = சிறிது
- சமையல் எண்ணெய் = 100 மி.லி
- உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் ப. அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- உருளை கிழங்கை நன்றாகக் கழுவி பின் தோலை சீவி பொடிப்பொடியாக அரிந்து எடுத்துக்கொள்ளவும்.
- அரிசி ஊறியவுடன், சமைத்து, சோறு வெந்தவுடன் தனியாக எடுத்து ஆறவைக்கவும்.
- பின் அடுப்பை பற்றவைத்து, அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரியவிடவும்.
- எண்ணெய் காய்ந்தவுடன் கறிமசாலாப் பட்டை, சோம்பு இவற்றை போடவும். சோம்பு பொரிந்தவுடன், பச்சைமிளகாயை அரிந்து போடவும். அதனுடன் கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு நன்றாக கிளறவும்.
- பின், உருளை கிழங்கை அதில் போட்டு கிளறவும். கிழங்கு சிவந்து வரும்போது தனி மிளகாய்த்தூள், உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள் இவற்றை போட்டு கிளறி இறக்கவும்.
- ஏலக்காயைப் பொடி செய்து, அதனுடன் போட்டு வதக்கி தனியாக இறக்கிவைத்த உருளை கிழங்கில் போட்டு ஆறவைத்த சாதத்துடன் கிளறி எடுக்கவும்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்.
குறிப்பு: உருளைக்கிழங்கு சாதத்துடன் தொட்டுக்கொள்ள தேங்காய்த்துவையல் நன்றாக இருக்கும்.
Be the first to comment