குருவிரொட்டி இணைய இதழ்

உருளைக்கிழங்கு சாதம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி -Potato Rice – Variety Rice – Recipe


உருளைக்கிழங்கு சாதம் – பல்வகை சாதம் –சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Potato Rice – Variety Rice – Recipe

தேவையான பொருட்கள்



செய்முறை

  1. முதலில் ப. அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
  2. உருளை கிழங்கை நன்றாகக் கழுவி பின் தோலை சீவி பொடிப்பொடியாக அரிந்து எடுத்துக்கொள்ளவும்.
  3. அரிசி ஊறியவுடன், சமைத்து, சோறு வெந்தவுடன் தனியாக எடுத்து ஆறவைக்கவும்.
  4. பின் அடுப்பை பற்றவைத்து, அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரியவிடவும்.
  5. எண்ணெய் காய்ந்தவுடன் கறிமசாலாப் பட்டை, சோம்பு இவற்றை போடவும்.  சோம்பு பொரிந்தவுடன், பச்சைமிளகாயை அரிந்து போடவும். அதனுடன் கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு நன்றாக கிளறவும்.
  6. பின், உருளை கிழங்கை அதில் போட்டு கிளறவும். கிழங்கு சிவந்து வரும்போது தனி மிளகாய்த்தூள், உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள் இவற்றை போட்டு கிளறி இறக்கவும்.
  7. ஏலக்காயைப் பொடி செய்து, அதனுடன் போட்டு வதக்கி தனியாக இறக்கிவைத்த உருளை கிழங்கில் போட்டு ஆறவைத்த சாதத்துடன் கிளறி எடுக்கவும்.

இப்போது சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்.

குறிப்பு: உருளைக்கிழங்கு சாதத்துடன் தொட்டுக்கொள்ள தேங்காய்த்துவையல் நன்றாக இருக்கும்.