வெங்காய சாதம் – பல்வகை சாதம் –சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Onion Rice – Variety Rice – Recipe
தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம் = 300 கிராம்
- பச்சரிசி (ப. அரிசி) = 1/2 கிலோ
- காய்ந்த மிளகாய் = 3
- பச்சை மிளகாய் = 2
- கடலைப் பருப்பு = 2 மேசைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு = 2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் = 1 சிட்டிகை
- கடுகு = 1/2 மேசைக்கரண்டி
- சமையல் எண்ணெய் = 150 மிலி
- நெய் = 1 மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை = சிறிதளவு
- உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் ப. அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- வெங்காயத்தை உரித்து பொடியாக அரிந்து கொள்ளவும்.
- பின், ஊற வைத்த அரிசியைக் கழுவி, குக்கரில் போட்டு தனியாக சமைத்து அதை ஆறவைக்கவும்.
- அடுப்பை மெதுவாக எரிய விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்தவுடன் காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளி எண்ணெயில் போடவும். மிளகாய் கருப்பு நிறத்தில் வந்தவுடன் கடுகைப் போடவும். கடுக்கு வெடிக்கும் போது, க. பருப்பு, உ. பருப்பு ஆகியவற்றைப் போட்டு கிளறிவிடவும். பின் அதனுடன் அரிந்து வைத்த வெங்காயத்தைப் போட்டு, அதனுடன் ப. மிளகாயையும் போட்டு நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன், சீரகத்தூள், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு நன்றாக கிளறி விடவும்.
- பின், ஆறவைத்த சாதத்தை அதில் போட்டு நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
இப்போது சுவையான வெங்காய சாதம் தயார்.
குறிப்பு: வெங்காய சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள தனியாத் துவையல் நன்றாக இருக்கும்.