தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை
எல்லாம் மாமரங்கள் – அதில்
எங்கும் மாமரங்கள்
இல்லை மற்ற மரங்கள்
இதுதான் மாந் தோப்பு.
எல்லாம் தென்னை மரங்கள் – அதில்
எங்கும் தென்னை மரங்கள்
இல்லை மற்ற மரங்கள்
இதுதான் தென்னந் தோப்பு.
எல்லாம் கமுக மரங்கள்
எங்கும் கமுக மரங்கள்
இல்லை மற்ற மரங்கள்
இது கமுகந் தோப்பு.
எல்லாம் புளிய மரங்கள்
எங்கும் புளிய மரங்கள்
இல்லை மற்ற மரங்கள்
இது புளியந் தோப்பு.