உயிர்கள் – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன்
பிளவுபட்ட குளம்புடையது மாடு
பிளவுபடாக் குளம்புடையது குதிரை
முளைக்கும் இருகொம்புடையது மாடு
முழுதுமே கொம்பில்லாதது குதிரை
பளபளென்று முட்டையிடும் பறவை
பட்டுப் போலக் குட்டிபோடும் விலங்கு
வெளியில் வராக் காதுடையது பறவை
வெளியில் நீண்ட காதுடையது விலங்கு.
நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலை
நீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம்
நீர்நிலையில் குட்டிபோடும் விலங்கு
நிறை மீன்கள் முட்டைஇடும் நீரில்
நீரிலுமே பாம் பிருப்பதுண்டு
நிலத்திலும் பாம் பிருப்பதுண்டு
ஊரிலுள்ள பாம்போடும் குட்டி
உள்ள பாம்பும் இடுவதுண்டு முட்டை
பிளவுபட்ட குளம்புடையது மாடு
பிளவுபடாக் குளம்புடையது குதிரை
முளைக்கும் இருகொம்புடையது மாடு
முழுதுமே கொம்பில்லாதது குதிரை.பளபளென்று முட்டையிடும் பறவை
பட்டுப் போலக் குட்டிபோடும் விலங்கு
வெளியில் வராக் காதுடையது பறவை
வெளியில் நீண்ட காதுடையது விலங்கு.நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலை
நீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம்
நீர்நிலையில் குட்டிபோடும் விலங்கு
நிறை மீன்கள் முட்டைஇடும் நீரில்.நீரிலுமே பாம் பிருப்பதுண்டு
நிலத்திலும் பாம் பிருப்பதுண்டு
ஊரிலுள்ள பாம்போடும் நீரில்
உள்ள பாம்பும் இடுவதுண்டு முட்டை.