அடுக்குத்தொடர் என்றால் என்ன?
ஒரு சொல் இரண்டு அல்லது அதற்கு மேல் மீண்டும் மீண்டும் வருவது (அடுக்கடுக்காக வருதல்) அடுக்குத் தொடர் எனப்படும். இத்தொடர்களில் வரும் சொற்கள் தனித்து வந்தாலும் அதே பொருள் தரும்.
எடுத்துக்காட்டு
வாழ்க! வாழ்க! – இதில் “வாழ்க” எனும் சொல் இருமுறை அடுக்கி “வாழ்க! வாழ்க!” என தொடர்ந்து வருகிறது. இதை “வாழ்க!” என்று தனித்து சொன்னாலும் அதே பொருள் தருகிறது.
மேலும் சில எடுத்துக்காட்டுகள்
- வளர்க! வளர்க!
- வருக! வருக!
- எத்தனை? எத்தனை?
- வா! வா!
- போ! போ!
- சிரி! சிரி!