இலக்கணக் குறிப்பு அறிவோம்! – பகுதி-1
வகுப்பு 6 முதல் 10 வரையிலான மாணவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கான இலக்கணக் குறிப்பு.
பண்புத்தொகை
- செந்தமிழ் = செம்மை + (ஆன) + மொழி → பண்புத்தொகை
- பைந்தமிழ் = பசுமை + (ஆன) + மொழி → பண்புத்தொகை
- பெருங்கடல் = பெருமை + (ஆகிய) + கடல் → பண்புத்தொகை
- அருங்காட்சி = அருமை + (ஆன) + காட்சி → பண்புத்தொகை
- வண்தமிழ் = வண்மை + (ஆன) + தமிழ் = வளமை + (மிக்க) + தமிழ் → பண்புத்தொகை
- வெண்புறா = வெண்மை + (ஆன) + புறா → பண்புத்தொகை
- நன்பொருள்
- தண்டமிழ் = தண்மை + (ஆன) + தமிழ் → பண்புத்தொகை
- நல்லுரை = நன்மை + (ஆகிய) + உரை → பண்புத்தொகை
வினைத்தொகை
- சுடுமண் = சுட்ட மண், சுடுகின்ற மண், சுடும் மண் → வினைத்தொகை
- ஊறுகாய் = ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய் → வினைத்தொகை
- குடிநீர் = குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர் → வினைத்தொகை
- சுடுசோறு = சுட்ட சோறு, சுடுகின்ற சோறு, சுடும் சோறு → வினைத்தொகை
- குளிர்நிலவு = குளிர்ந்த நிலவு, குளிர்கின்ற நிலவு, குளிரும் நிலவு → வினைத்தொகை
- மூடுபனி = மூடிய பனி, மூடுகின்ற பனி, மூடும் பனி → வினைத்தொகை
உரிச்சொல் தொடர்
- மாநகரம் = மா + நகரம் → உரிச்சொல் தொடர் (இதில் மா என்பது உரிச்சொல்)
- சாலச்சிறந்தது – சால + சிறந்தது → உரிச்சொல் தொடர் (இதில் சால என்பது உரிச்சொல்)
- உறுபசி = உறு + பசி உரிச்சொல் தொடர் (இதில் உறு என்பது உரிச்சொல்)
- உறுபொருள் = உறு + பொருள் உரிச்சொல் தொடர் (இதில் உறு என்பது உரிச்சொல்)
எண்ணும்மை
கீழேயுள்ள சொற்களில் உம் எனும் இடைச்சொல் வெளிப்படையாக வந்துள்ளது.
- எண்ணும் எழுத்தும்
- ஒலியும் ஒளியும்
- இரவும் பகலும்
- ஆடலும் பாடலும்
- நீரும் நிலமும்
உம்மைத்தொகை
கீழேயுள்ள சொற்களில் உம் எனும் இடைச்சொல் மறைந்து வந்துள்ளது.
- எண் எழுத்து
- ஒலி ஒளி
- இரவு பகல்
- ஆடல் பாடல்
- நீர் நிலம்
அடுக்குத்தொடர்
- வாழ்க! வாழ்க!
- வளர்க! வளர்க!
- வருக! வருக!
- எத்தனை? எத்தனை?
- வா! வா!
- போ! போ!
- சிரி! சிரி!
இரட்டைக்கிளவி
- கட கட (எ.கா: கட கட வண்டி)
- சாரை சாரை (எ.கா: எறும்புகள் சாரை சாரையாக சென்றன)
- பட பட (எ.கா: சிறுவன் பட படவென்று வேகமாக பேசினான்)
- மட மட
- சட சட
- சல சல
- தட தட
பெயரெச்சம்
- வந்த (எ.கா: வந்த மாணவன்)
- சென்ற (எ.கா: சென்ற மாணவன்)
- பறந்த (எ.கா: பறந்த பறவை)
- ஓடிய (எ.கா: ஓடிய விலங்கு)
- பாடிய (எ.கா: பாடிய பறவை)
- படித்த (எ.கா: படித்த பாடம்)
- எழுதிய (எ.கா: எழுதிய கவிதை)
வினையெச்சம்
- வந்து (எ.கா: இரயில் வந்து நின்றது)
- சென்று (எ.கா: சென்று வா.)
- பறந்து (எ.கா: அது பறந்து வந்தது)
- ஒடி (எ.கா: ஓடிச் சென்றது)
- பாடி (எ.கா: பாடித் திரிந்தது)
- படித்து (எ.கா: படித்துப் பார்த்தான்)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- ஓடா (எ.கா: ஓடா வண்டி)
- பாடா (எ.கா: பாடா குயில்)
- நாறா (எ.கா: நாறா மலர்)
- செல்லா (எ.கா: செல்லாக் காசு)
வேற்றுமைத்தொகை
- நூல் படித்தான் = நூலை + படித்தான் = நூல் + (ஐ) + படித்தான் → இரண்டாம் வேற்றுமைத்தொகை
- தலைவணங்கு = தலையால் வணங்கு = தலை + (ஆல்) + வணங்கு → மூன்றாம் வேற்றுமைத்தொகை
- பள்ளி செல் = பள்ளிக்குச் செல் = பள்ளி + (கு) + செல் → நான்காம் வேற்றுமைத்தொகை
- குயில் பாட்டு = குயிலின் பாட்டு = குயில் + (இன்) + பாட்டு → ஐந்தாம் வேற்றுமைத்தொகை
- அவன் புத்தகம் = அவனது புத்தகம் = அவன் + (அது) + புத்தகம் → ஆறாம் வேற்றுமைத்தொகை
- மலைக்குகை = மலைக்கண் குகை = மலை + (கண்) + குகை → ஏழாம் வேற்றுமைத்தொகை