பண்புத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

தமிழ் இலக்கணம்

பண்புத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

பெயர்ச்சொல்லைத் தழுவி அதன் முன்பு பண்புப் பெயர் வரும்போது, பண்புப் பெயருக்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ‘ஆன‘, ‘ஆகிய‘ பண்பு உருபுகள் மறைந்து வந்தால், அதற்குப் பண்புத்தொகை என்று பெயர்.

எடுத்துக்காட்டு:

செந்தமிழ் எனும் சொல்லை செம்மை + தமிழ் எனப் பிரிக்கலாம். இதில் தமிழ் எனும் பெயர்ச்சொல்லை, செம்மை எனும் பண்புப் பெயர் தழுவி வருகிறது.

செம்மை எனும் பண்புப் பெயருக்கும் தமிழ் எனும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன எனும் பண்பு உருபு மறைந்து வந்து, செம்மையான தமிழ் (செம்மை + ஆன + தமிழ்) எனும் பொருளைத் தருகிறது. எனவே, செந்தமிழ் பண்புத்தொகை ஆயிற்று.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

  • செந்தமிழ் = செம்மை + (ஆன) + மொழி பண்புத்தொகை
  • பைந்தமிழ் = பசுமை + (ஆன) + மொழி பண்புத்தொகை
  • பெருங்கடல் = பெருமை + (ஆகிய) + கடல் பண்புத்தொகை
  • அருங்காட்சி = அருமை + (ஆன) + காட்சி பண்புத்தொகை
  • வண்தமிழ் = வண்மை + (ஆன​) + தமிழ் = வளமை + (மிக்க) + தமிழ் பண்புத்தொகை
  • வெண்புறா = வெண்மை + (ஆன) + புறா பண்புத்தொகை
  • தண்டமிழ் = தண்மை + (ஆன) + தமிழ் பண்புத்தொகை
  • நல்லுரை = நன்மை + (ஆகிய) + உரை பண்புத்தொகை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.