குருவிரொட்டி இணைய இதழ்

வினைத்தொகை என்றால் என்ன? – இலக்கணம்

வினைத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்

ஒரு பெயர்ச்சொல்லின் முதல் பகுதி வினைச்சொல்லாக வந்து, அதில் மூன்று காலங்களும் மறைந்து வந்தால் அதற்கு வினைத்தொகை என்று பெயர்.

இதில் தொகை என்ற சொல்லுக்கு, “மறைந்து வருதல்” என்று பொருள். வினைச்சொல்லின் மூன்று காலங்களும் மறைந்து வருவதால், இது வினைத்தொகை ஆயிற்று.

எடுத்துக்காட்டாக, குடிநீர் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லின் வினைப்பகுதியான “குடி” என்ற சொல்லானது, குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர் என்று மூன்று காலங்களையும் உணர்த்தும் பொருள்களில் வருகிறது.

குடிநீர்

மேலும் சில எடுத்துக்காட்டுகள்