குருவிரொட்டி இணைய இதழ்

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது – தகரவருக்கப் பாட்டு – தூது – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர்


தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது – தகரவருக்கப் பாட்டு – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர்


தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

தித்தித்த தோதித் திதி.

– தகரவருக்கப் பாட்டு, வித்தாரச்செய்யுள், தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர்



புலியூர்க் கேசிகன் உரை

செய்யுள் அமைதியுடன் வித்தாரமாகப் பாடியவை வித்தாரச்செய்யுட்கள் ஆகும். நுட்பமாகப் பொருளைக்கண்டு உணர்தல் வேண்டும்.

இது தகரவருக்கச் செய்யுள். தூது என்ற சொல் பன்முறை வருமாறு புலவர் பாடியுள்ளார்.


அடிமைப்பெண்கள் சென்று உரைக்கும் தூதோ பயன்படாதது. கிளியோ போய்த் தூது உரைக்க மாட்டாது; தோழியின் தூதானது நாளைக்கடத்திக் கொண்டே போகும் தூதாயிருக்கும்; தெய்வத்தை வழிபட்டுத் தொடர்தலும் பயனற்றதாகும்; தெய்வத்தை வழிபட்டுத் தொடர்தலும் பயனற்றதாகும்; அதனால், பூந்தாதிதினைப் போன்ற தேமல்கள் என்மேல் படர்ந்து மிகாது; எனக்கு இனிமையானதான என் காதலனின் பெயரையே நான் ஓதிக்கொண்டிருப்பேனாக.