குருவிரொட்டி இணைய இதழ்

அடக்கம் உடையார் – மூதுரை – ஔவையார்

அடக்கம் உடையார் – மூதுரை – ஔவையார்

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

செய்யுள்: 16, மூதுரை (ஔவையார்)


விளக்கம்

பாய்கின்ற நீரில் ஓடக்கூடிய சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், கொக்கானது தனக்கு  இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும்வரை அசைவின்றிக் காத்துக்கொண்டிருக்கும். அதுபோலத் தமக்கு உரிய காலம் வரும் வரை சிலர் அடங்கி இருப்பார்கள். அவர்களை அறிவில்லாதவர் என எண்ணி வெல்வதற்கு நினைக்கக் கூடாது.