கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி – போலி அறிவின் புன்மை – மூதுரை – ஔவையார்
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.
– போலி அறிவின் புன்மை – மூதுரை – ஔவையார்
விளக்கம்
கற்கவேண்டியவற்றை (முறையாகக்) கல்லாதவன், (கற்றோர் கூறுவதைக் கேட்டு) ஒரு கவியைக் கற்றுக்கொண்டு சொல்லுதல், காட்டிலுள்ள மயில் (தன் அழகிய தோகையை விரித்து) ஆட, அதைப் பார்த்துக்கொண்டிருந்த வான்கோழியானது, தன்னையும் அம் மயிலாகவே நினைத்துக்கொண்டு, தானும் தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடினாற் போலும்.