உத்தமர் காந்தி அடிகள் – எழுதியவர்: ந. உதயநிதி
உலகில் உள்ள மக்களெல்லாம்
அமைதி கொள்ளுங்கள்
உத்தமர்காந்தி கொள்கை தனை
நினைவு கொள்ளுங்கள்!
அறப்போரில் அமைதி கண்டார்
காந்தி அடிகளே
அன்னை பூமி காத்தது
அவரின் அரிய செயல்களே!
வன்முறையில் அமைதி
கண்டோர் யாருமில்லையே!
அறப்போரில் அமைதி கண்டார்
காந்தி அடிகளே!
அன்னை பூமி காத்தது
அவரின் அரிய செயல்களே!
அறத்தைப் போற்றி
நாமும் காப்போம் அவ்வழியிலே!
என்றும் எங்கள் காந்தி அடிகள்
அன்பின் வடிவமே!
நட்பு கொண்டு வாழ்ந்திடுவோம்
அந்த வண்ணமே!
அவர்கொள்கைகளை நினைப் பதினால்
அன்பு நிலைக்குமே!
அன்பு நிலைக்குமே!
விடுதலையில் மகிழ்ந்த மக்கள்
உங்கள் நினைப்பிலே!
விட்டு எம்மை மறைந்து விட்டாய்
உண்மை வடிவிலே!
உங்கள் நினைவு எம்மை
வழி நடத்தும் அன்பு வடிவிலே! அன்பு வடிவிலே!