நான்மணிக்கடிகை – 104 – விளம்பி நாகனார்
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதுஒன்றும்
ஒருவன் அறியா தவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றம் உளானும் ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும் இல்.
விளக்கம்
எல்லாக் கலைகளையும் தெரிந்தவன் ஒருவனும் இல்லை; ஒரு சிறிதும், தெரியாதவன் ஒருவனும் இல்லை; ஒரு நல்லியல்பும் இல்லாமல் பிழையே உள்ளவன் ஒருவனும் இல்லை; அறியாமை சிறிதும் இல்லாமல் கற்றறிந்தவனும் இல்லை.
அதாவது,
- எல்லாம் அறிந்தவனும் யாரும் இல்லை;
- ஒன்றும் அறியாதவனும் யாரும் இல்லை;
- குற்றம் மட்டுமே உள்ளவனும் யாரும் இல்லை;
- அறியாமை அறவே இல்லாதவனும் யாரும் இல்லை.
Be the first to comment