குருவிரொட்டி இணைய இதழ்

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது – நாலடியார்: 140


அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலகநூல் ஓதுவ தெல்லாம் – கலகல
கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல்.
நாலடியார் 140

– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்



விளக்கம்

கற்கத்தகுந்த உண்மையான அறிவைத் தருகின்ற நூல்களைக்கற்று பயன்பெறாமல், வெறும் உலகியல் நூல்களை மட்டுமே எப்போதும் கற்பது, கலகல என்று இரையும் ஆரவாரத்தன்மை உடையவையே; அவ்வுலக நூலறிவு கொண்டு, பிறவித் துன்பங்களிலிருந்து விடுபடும் முறைமையை அறிந்தவர் எவரும் இல்லை.