கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு. – நாலடியார் 139
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர்
தொல் சிறப்பின்
ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு.
விளக்கம்
பழமையான சிறப்பையும், பளிச்சிடும் நிறத்தையும் உடைய பாதிரிப் பூவை இடுவதால், புதிய மண்பாண்டமும் அதில் உள்ள தண்ணீரும் அப்பூவின் மணத்தைப் பெறும்; அதுபோல, கல்லாதவர்கள் கற்றாரோடு பழகினால், நாள்தோறும் நல்லறிவு பெறுவார்கள்.