கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. – நாலடியார்: 135
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல
தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
விளக்கம்
கல்வி அளவில்லாதது; எல்லையற்றது; முடிவற்றது; ஆனால், கல்வி கற்பவர் வாழ்நாட்களோ சிலவாகும். சற்று பொறுமையாக நினைத்துப்பார்த்தால் அச் சில வாழ்நாட்களில் பிணிகள் பலவாயிருக்கின்றன. பாலுடன் நீரும் கலந்து இருக்கும்போது, அதிலிருந்து நீரை நீக்கிப் பாலை மட்டும் தனித்துப் பிரித்து அருந்தும் அன்னப் பறவையைப்போல, அறிவுடையோர் பயனற்ற நூல்களைத் தவிர்த்து, கற்கத்தகுந்த சிறந்த நூல்களை மட்டுமே ஆராய்ந்து கற்பார்கள்.
Nice