குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் – நாலடியார்: 131
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. – நாலடியார் 131
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல
நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
விளக்கம்
தலைமுடியின் அழகும், உடலை வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும், மஞ்சள் பூச்சின் அழகும் மக்களுக்கு அழகுகள் அல்ல; நாம் நல்லவர் என்று தம் மனம் அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால், மக்களுக்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.
Be the first to comment