ஓதியும் ஓதார் உணர்விலார் – நாலடியார் : 270

ஓதியும் ஓதார் உணர்விலார்

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார் – தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயார் எனின்.
– நாலடியார் : 270

– அதிகாரம்: நன்றியில் செல்வம் (பயன்படாத செல்வம்), பால்: பொருள்



விளக்கம்

இயற்கையறிவில்லாதவர் நூல்களை ஓதினாராயினும் ஓதாதவரேயாவர்; இயற்கை யறிவுடையார் நூல்களை ஓதாதிருந்தும் ஓதினாரோடு ஒப்ப விளங்குவர். வறுமையுற்றும், மனத்தூய்மையோடிருந்து பிறரை ஒன்று இரவாதவர் செல்வரேயாவர்; செல்வரும் பிறர்க்கு ஒன்று உதவாரென்றால் வறுமையாளரே ஆவர்.



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.