வைப்புழிக் கோட்படா – நாலடியார் – 134

வைப்புழிக் கோட்படா

வைப்புழிக் கோட்படா – நாலடியார் – 134

வைப்புழிக் கோட்படா வாய்த்துஈயின் கேடுஇல்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற
. – நாலடியார் – 134

– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்

விளக்கம்

கல்வியை (சேமித்து) வைத்த இடத்திலிருந்து பிறரால் எடுத்துக்கொள்ள முடியாது; நல்ல மாணவர்கள் வாய்த்து அவருக்குக் கற்பிக்க நேர்ந்தால் அதனால் அழிதல் இல்லை; தம்மை விட மிகுந்த செல்வாக்கினை உடைய அரசர் சினம் கொண்டாலும், கவர இயலாது; ஆகையால், வைப்பு (சேமிப்பு) என ஒருவன் தன் பிள்ளைகளுக்குத் தேடி வைக்கத் தகுந்தவை கல்வியே ஆகும். மற்ற பிற அல்ல.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.