குருவிரொட்டி இணைய இதழ்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முத்தான மாபெரும் படைப்புகள் – நூல்கள் அறிவோம்!

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முத்தான மாபெரும் படைப்புகள்

இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முத்தமிழிலும் ஈடு இணையற்ற தனது படைப்புகளின் மூலம் தென்குமரியில் வானுயர உயர்ந்து நிற்கும் திருவள்ளுவருக்குச் சிலை கண்ட திருவள்ளுவராய், செம்மொழியாய், முத்தமிழாய், தமிழர்தம் மனதில் நீங்கா இடம் பெற்று உயர்ந்து நிற்கிறார் நம் முத்தமிழறிஞர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள். அவர்தம் இனிய செம்மொழிப் படைப்புகளில் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:

உரை ஓவியங்கள்

  1. குறளோவியம் (குறுநூல்) 1956
  2. குறளோவியம் (முதல் பதிப்பு) 1985
  3. தேனலைகள் மூன்றாம் பதிப்பு 1982
  4. சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்) – (முதல் பதிப்பு) 1987
  5. திருக்குறள் கலைஞர் உரை – (முதல் பதிப்பு) 1996
  6. தொல்காப்பியப் பூங்கா 2003

கவிதைகள்

  1. கவிதையல்ல 1945
  2. முத்தாரம் (சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு)
  3. அண்ணா கவியரங்கம் 1968
  4. Pearls (Translation) 1970
  5. கவியரங்கில் கலைஞர் 1971
  6. கலைஞரின் கவிதைகள் 1977
  7. வாழ்வெனும் பாதையில் – கவியரங்கக் கவிதை
  8. கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
  9. கலைஞரின் கவிதை மழை 2004

சிறுகதைகள்

  1. சங்கிலிச் சாமியார் 1945
  2. கிழவன் கனவு 1948
  3. பிள்ளையோ பிள்ளை 1948
  4. தப்பிவிட்டார்கள் 1952
  5. தாய்மை 1956
  6. கண்ணடக்கம் 1957
  7. நாடும் நாடகமும் 1953
  8. நாடும் நாடகமும் 1968
  9. முடியாத தொடர்கதை 1982
  10. கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 1977, 1982
  11. கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் (நான்காம் பதிப்பு) – 1991
  12. 16 – கதையினிலே 1995
  13. நளாயினி
  14. பழக்கூடை 1979
  15. வாழ முடியாதவர்கள்
  16. தேனலைகள் 1985
  17. ஒருமரம் பூத்தது, சிறுகதைகள், 1979

வரலாற்று புதினங்கள்

  1. பலிபீடம் நோக்கி 1947
  2. ரோமாபுரிப் பாண்டியன் 1974
  3. பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988
  4. பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991
  5. தென்பாண்டிச் சிங்கம் 1983
  6. தாய் – காவியம்

புதினங்கள்

  1. வெள்ளிக்கிழமை (இரண்டாம் பதிப்பு) 1968
  2. சுருளிமலை (ஐந்தாம் பதிப்பு) 1968
  3. வான்கோழி 1978
  4. புதையல் 1975
  5. ஒரே ரத்தம் 1980
  6. ஒரு மரம் பூத்தது
  7. அரும்பு (குறும் புதினம்) 1978, 1983
  8. பெரிய இடத்துப் பெண் (குறும் புதினம்)
  9. சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)
  10. நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953

கட்டுரை நூல்கள்

  1. உணர்ச்சி மாலை 1951
  2. பெருமூச்சு 1952
  3. விடுதலைக்கிளர்ச்சி (இரண்டாம் பதிப்பு) 1952
  4. களத்தில் கருணாநிதி 1952
  5. பேசும் கலை வளர்ப்போம் 1981
  6. பூந்தோட்டமும் – இனமுழக்கமும் 1986
  7. யாரால்? யாரால்? யாரால்? (முதல் பதிப்பு) 1981
  8. மலரும் நினைவுகள் 1996
  9. இலங்கைத் தமிழா, இது கேளாய்!
  10. திராவிடசம்பத்து 1951
  11. தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985
  12. உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
  13. இருளும் ஒளியும்
  14. சரித்திரத் திருப்பம்
  15. உண்மைகளின் வெளிச்சத்தில் 1983
  16. மயிலிறகு 1993
  17. அகிம்சா மூர்த்திகள் 1953
  18. அல்லி தர்பார் 1953
  19. இன முழக்கம்
  20. உணர்ச்சி மாலை
  21. கருணாநிதியின் வர்ணனைகள் 1952
  22. சுழல் விளக்கு 1952
  23. துடிக்கும் இளமை
  24. நாடும் நாடகமும் 1953
  25. விடுதலைக் கிளர்ச்சி 1952

வரலாறு, தன் வரலாறு

  1. இனியவை இருபது (முதல் பதிப்பு) 1973
  2. இந்தியாவில் ஒரு தீவு 1978
  3. ஆறுமாதக் கடுங்காவல் 1985
  4. நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
  5. முதல் பதிப்பு 1975
  6. நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்) – முதல் பதிப்பு 1987
  7. நெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம் – முதல் பதிப்பு) 1997
  8. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) முதல் பதிப்பு 2003
  9. நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்) – முதல் பதிப்பு ஜூன் 2013
  10. நெஞ்சுக்கு நீதி (ஆறாம் பாகம்) – முதல் பதிப்பு அக்டோபர் 2013
  11. கையில் அள்ளிய கடல் (பேட்டிகளின் தொகுப்பு) 1998

கலைஞரின் பொன்மொழிகள், சிந்தனைக் கருத்துக்கள்

  1. சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் (முதல் பதிப்பு) 1978
  2. வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982
  3. கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996
  4. கலைஞரின் நவமணிகள் 1984
  5. சிந்தனை ஆழி 1953
  6. கலைஞரின் கருத்துரைகள் (முதல் தொகுப்பு) 1967
  7. கலைஞரின் கருத்துரைகள் – 1971
  8. கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978
  9. கலைஞரின் சொல்நயம் 1984
  10. கலைஞரின் சின்ன சின்ன மலர்கள் முதல் பதிப்பு 1994
  11. கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத்துளிகள்
  12. கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
  13. கலைஞரின் உவமை நயங்கள் 1972

திரையுலகப் படைப்பில் கலைஞரின் பங்களிப்பு

  1. ராஜகுமாரி (வசனம்) 11.4.1946
  2. அபிமன்யூ (வசனம்) 6.5.1948
  3. மருதநாட்டு இளவரசி (கதை, வசனம்) 2.4.1950)
  4. மந்திரி குமாரி (கதை, வசனம், பாடல்) 24.6.1950
  5. தேவகி(கதை, வசனம்) 21.6.1951
  6. மணமகள் ( திரைகதை, வசனம்) 15.8.1951
  7. பராசக்தி (திரைக்கதை, வசனம், பாடல்) 17.10.1952
  8. பணம் (திரைக்கதை, வசனம்) 27.12.1952
  9. நாம் (கதை வசனம்) 05.03.1953
  10. திரும்பிப் பார் (கதை, வசனம் ) 10.7.1953
  11. மனோகரா (திரைக்கதை, வசனம்) 03.3.1954
  12. மலைக்கள்ளன் (திரைக்கதை, வசனம்) 22.7.1954
  13. அம்மையப்பன் (கதை, வசனம்) 24.9.1954
  14. ராஜா ராணி (கதை, வசனம்) 25.2.1956
  15. ரங்கோன்ராதா (திரைக்கதை, வசனம், பாடல்) 1.11.1956
  16. புதையல் ( கதை வசனம்) 16.5.1957
  17. புதுமைப்பித்தன் (கதை, வசனம்) 2.8.1957
  18. குறவஞ்சி (கதை, வசனம், பாடல்) 4.3.1960
  19. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (வசனம்)1.7.1960
  20. அரசிளங்குமரி (கதை, வசனம்) 1.1.1961
  21. தாயில்லாப் பிள்ளை (திரைக்கதை, வசனம்) 18.8.1961
  22. இருவர் உள்ளம் (திரைக்கதை, வசனம்) 29.3.1963
  23. காஞ்சித் தலைவன் (கதை, வசனம், பாடல்) 26.10.1963
  24. பூம்புகார் (திரைக்கதை, வசனம், பாடல்) 18.9.1964
  25. பூமாலை (கதை, வசனம், பாடல்)23.10.1965
  26. அவன் பித்தனா? (திரைக்கதை, வசனம், பாடல்)12.8.1966
  27. மறக்க முடியுமா (திரைக்கதை, வசனம், பாடல்) 12.8.1966
  28. மணிமகுடம்(கதை, வசனம்) 9.12.1966
  29. தங்கத்தம்பி (கதை, வசனம்) 9.1.1967
  30. வாலிப விருந்து (கதை, வசனம்) 2.6.1967
  31. எங்கள் தங்கம் (கதை) 9.10.1970
  32. பிள்ளையோ பிள்ளை (கதை, வசனம்) 23.6.1972
  33. அணையாவிளக்கு ( கதை) 15.8.1975
  34. வண்டிக்காரன் மகன் (திரைக்கதை, வசனம்) 30.10.1978
  35. நெஞ்சுக்கு நீதி (கதை, வசனம், பாடல்) 27.4.1979
  36. ஆடு பாம்பே (கதை, வசனம்) 30.6.1979
  37. குலக்கொழுந்து (கதை, வசனம்) 23.1.1981
  38. மாடிவீட்டு ஏழை (திரைக்கதை, வசனம்) 22.8.1981
  39. தூக்குமேடை (கதை, வசனம் பாடல்) 28.5.1982
  40. காகித ஓடம் (திரைக்கதை, வசனம்) 14.1.1986
  41. பாலைவன ரோஜாக்கள் (திரைக்கதை, வசனம்) 1.11.1986
  42. நீதிக்குத் தண்டனை 1.5.1987
  43. ஒரே ரத்தம் (கதை, வசனம், பாடல்) 8.5.1987
  44. மக்கள் ஆணையிட்டால் (திரைக்கதை, வசனம், பாடல்) 29.1.1988
  45. பாசப்பறவைகள் (திரைக்கதை, வசனம்) 29.4.1988
  46. இது எங்கள் நீதி (திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
  47. பாடாத தேனீக்கள் (திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
  48. தென்றல் சுடும் (திரைக்கதை, வசனம்) 10.3.1989
  49. பொறுத்தது போதும் (திரைக்கதை, வசனம்) 15.7.1989
  50. நியாயத் தராசு (திரைக்கதை, வசனம்) 11.8.1989
  51. பாசமழை (கதை, வசனம்) 28.10.1989
  52. காவலுக்குக் கெட்டிக்காரன் (திரைக்கதை, வசனம்) 14.1.1990
  53. மதுரை மீனாட்சி (திரைக்கதை, வசனம், பாடல்) 24.2.1993
  54. புதிய பராசக்தி (திரைக்கதை, வசனம்) 23.3.1996
  55. மண்ணின் மைந்தன் (திரைக்கதை, வசனம்) 4.3.2005
  56. பாசக்கிளிகள் (திரைக்கதை, வசனம்) 14.1.2006
  57. உளியின் ஓசை (திரைக்கதை, வசனம்) 4.7.2008
  58. பெண்சிங்கம் (திரைக்கதை, வசனம்) 3.6.2010
  59. இளைஞன் (திரைக்கதை, வசனம்)14.1.2011
  60. பொன்னர் சங்கர் (திரைக்கதை, வசனம்) 9.4.2011

நாடக உலகம் – எழுதியும் நடிக்கவும் பெற்றவை

  1. சாந்தா (அ) பழனியப்பன் (நான்காம் பதிப்பு) 1943
  2. நச்சுக்கோப்பை 1985
  3. மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953
  4. மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) 1956
  5. தூக்கு மேடை 1951
  6. உதயசூரியன் (இரண்டாவது பதிப்பு) 1959
  7. ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) 1964
  8. திருவாளர் தேசியம்பிள்ளை (இரண்டாவது பதிப்பு)1967
  9. சிலப்பதிகார நாடகக் காப்பியம் 1967
  10. பரதாயணம் 1978
  11. புனித இராஜ்யம் 1979
  12. நான்மணிமாலை (குறு நாடகங்கள்)
  13. காகிதப்பூ 1966
  14. பரப்பிரம்மம் 1953
  15. நானே அறிவாளி 1971
  16. அனார்கலி 1967
  17. சாக்ரடீஸ் 1967
  18. உன்னைத்தான் தம்பி
  19. சேரன் செங்குட்டுவன் 1978

கலைஞரின் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்

1950 – மந்திரி குமாரி
1952 – பராசக்தி
1953 – நாம்
1954 – அம்மையப்பன்
1956 – ராஜா ராணி
1956 – ரங்கோன் ராதா
1960 – குறவஞ்சி
1963 – காஞ்சித்தலைவன்
1964 – பூம்புகார்
1965 – பூமாலை
1966 – மறக்க முடியுமா ?
1979 – நெஞ்சுக்கு நீதி
1982 – தூக்கு மேடை
1987 – வீரன் வேலுதம்பி
1987 – ஒரே ரத்தம்
1988 – மக்கள் ஆணையிட்டால்
1988 – இது எங்கள் நீதி
1993 – மதுரை மீனாட்சி

தொலைக்காட்சித் தொடராக வெளியான கலைஞரின் நாவல்கள்

  1. தென்பாண்டிச் சிங்கம்
  2. இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்