இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். – குறள்: 961
– அதிகாரம்: மானம், பால்: பொருள்
கலைஞர் உரை
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செய்யாத விடத்துத் தாம் வாழ முடியாத அளவு முதன்மை வாய்ந்தன வெனினும்; தம் குடிப்பிறப்புத் தாழ்வதற் கேதுவான இழிசெயல்களைச் செய்யா தொழிக.
மு. வரதராசனார் உரை
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பணிவு வேண்டும். செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.
G.U. Pope’s Translation
Though linked to splendours man no otherwise may gain,
Reject each act that may thine honour’s clearness stain.
– Thirukkural: 961, Honour, Wealth
Be the first to comment