துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும். – குறள்: 651
– அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்;
அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவனுக்குத்துணையின் நன்மை செல்வம் ஒன்றையே தரும்; ஆயின் , வினையின் நன்மையோ செல்வம் உட்பட ஒருவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தரும்.
மு. வரதராசனார் உரை
ஒருவனுக்கு வாய்ந்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்; செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
G.U. Pope’s Translation
The good external help confers is worldly gain; By action good men every needed gift obtain.
– Thirukkural: 651, Purity in Action, Wealth