தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணி – குறள்: 462

Thiruvalluvar

தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல்.
– குறள்: 462

அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் தெரிந்தெடுத்த சூழ்ச்சித்துணையினத்தோடு கூடிச் செய்யத்தகும் வினையை ஆராய்ந்து பின் தாமும் தனிப்பட எண்ணிச் செய்ய வல்ல அரசர்க்கு; முடித்தற் குரிய வினை எதுவும் இல்லை.



மு. வரதராசனார் உரை

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.



G.U. Pope’s Translation

With chosen friends deliberate; next use the private thought; Then act by those who thus proceed all works with ease are wrought.

 – Thirukkural: 462, Acting after due Consideration, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.