குருவிரொட்டி இணைய இதழ்

பொதுநலத்தார் புன்நலம் தோயார் – குறள்: 915


பொதுநலத்தார் புன்நலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
குறள்: 915

– அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள்.



கலைஞர் உரை

இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள்
பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இயற்கையான மதி நுட்பத்தால் மாட்சிமைப்பட்ட செயற்கையான கல்வியறிவினையுடையார்; பொருள் கொடுத்தாரெல்லாரும் பொதுவாக நுகர்தற்குரிய விலைமகளிராற் பெறும் இழிந்த சிறிய இன்பத்திற் படியார்



மு. வரதராசனார் உரை

இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.



G.U. Pope’s Translation

From contact with their worthless charms, whose charms to all are free,
The men with sense of good and lofty wisdom blest will flee.

Thirukkural: 915, Wanton Women, Wealth.