குருவிரொட்டி இணைய இதழ்

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் – குறள்: 689


விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.
– குறள்: 689

– அதிகாரம்: தூது, பால்: பொருள்



கலைஞர் உரை

ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன்,
வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி
படைத்தவனாக இருத்தல் வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் அரசன் சொல்லி விடுத்த செய்தியை வேற்றரசரிடம் சென்று கூறுபவன்; தனக்கு நேரக்கூடிய தீங்கிற்கு அஞ்சி வாய்தவறியும் தாழ்வான சொற்களைச் சொல்லாத திண்ணிய நெஞ்சனாயிருத்தல் வேண்டும்.



மு. வரதராசனார் உரை

குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.



G.U. Pope’s Translation

His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his king.

 – Thirukkural: 689, The Envoy, Wealth