ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை. – குறள்: 594
– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செல்வம் தளர்வில்லாத ஊக்க முள்ளவனிடத்திற்கு தானாகவே வழி வினவிக்கொண்டு செல்லும்.
மு. வரதராசனார் உரை
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
Be the first to comment