குருவிரொட்டி இணைய இதழ்

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் – குறள்: 740


ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
வேந்துஅமைவு இல்லாத நாடு.
– குறள்: 740

– அதிகாரம்: நாடு, பால்: பொருள்



கலைஞர் உரை

நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும்
எந்தப் பயனும் இல்லாமற் போகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசனோடு பொருந்துத லில்லாத நாடு; மேற் கூறியவாறு எல்லா நலங்களும் அமைந்திருந்ததாயினும் அவற்றாற் பயனில்லாததே யாகும்.



மு. வரதராசனார் உரை

நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைந்திருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமற் போகும்.



G.U. Pope’s Translation

Though blest with all these varied gifts’ increase, A land gains nought that is not with its king at peace.

 – Thirukkural: 740, The Land, Wealth