ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். – குறள்: 493
– அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள்
கலைஞர் உரை
தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும்
காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றிகிட்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தக்க இடத்தைத்தெரிந்து தம்மைக் காத்துக் கொண்டு , பகைவரொடு போர்வினை செய்வராயின் ; வலிமையில்லாதவரும் வலிமையராகி வெல்வர் .
மு. வரதராசனார் உரை
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர்.
G.U. Pope’s Translation
E’en weak ones mightily prevail, if palce of strong defence, They find, protect themselves, and work their foes offence.
– Thirukkural: 493, Knowing the Place, Wealth