குருவிரொட்டி இணைய இதழ்

ஆற்றின் அளவுஅறிந்து ஈக – குறள்: 477


ஆற்றின் அளவுஅறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.
– குறள்: 477

– அதிகாரம்: வலியறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஈகை நெறிப்படி தன் செல்வத்தின் அளவறிந்து அதற்குத் தக்கவாறு அளவாக ஈக ; அதுவே செல்வத்தைப் பேணிக்காத்து ஈந்தொழுகும் வழியாம் .



மு. வரதராசனார் உரை

தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்; அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும்.



G.U. Pope’s Translation

With knowledge of the measure due,as virtue bids you, give! That is the way to guard your wealth, and seemly live.

 – Thirukkural: 477, The Knowledge of Power, Wealth