குருவிரொட்டி இணைய இதழ்

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் – குறள்: 225


ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

– குறள்: 225

– அதிகாரம்: ஈகை, பால்: அறம்



கலைஞர் உரை

பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப் பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தவத்தால் வலிமையடைந்தாரது வலிமையெல்லாம் தம்மை வருத்தும் பசியைப் பொறுத்துக் கொள்ளுதலே; அவ்வலிமையும் அப்பொறுத்தற்கரிய பசியை ஈகையால் ஒழிப்பவரது வலிமைக்குப் பிற்பட்டதே. தம்பசியை மாற்ற மாட்டாதவரது வலிமையினும், தம்பசியையும் பிறர் பசியையும் ஒருங்கே மாற்றுவாரது வலிமை சிறந்ததென்பதாம்.



மு. வரதராசனார் உரை

தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.



G.U. Pope’s Translation

‘Mid devotees they’re great who hunger’s pangs sustain, Who hunger’s pangs relieve a higher merit gain.

 – Thirukkural: 225,Giving, Virtues