அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். – குறள்: 954
– அதிகாரம்: குடிமை, பால்: பொருள்.
கலைஞர் உரை
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில்
பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம்
தரமாட்டார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பலவாக அடுக்கியகோடிக்கணக்கான பொன்னைப் பெறுவதாயிருப்பினும்; தம் ஒழக்கங்குன்றுவதற் கேதுவான இழிசெயல்களைச் செய்யார்.
மு. வரதராசனார் உரை
பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.
G.U. Pope’s Translation
Millions on millions piled would never win
The men of noble race to soul-degrading sin.
– Thirukkural: 954, Nobility, Wealth.
Be the first to comment