அகப்பட்டி ஆவாரைக் காணின் – குறள்: 1074

Thiruvalluvar

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். – குறள்: 1074

– அதிகாரம்: கயமை, பால்: பொருள்



கலைஞர் உரை

பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான
குணமுடையோரைக் கண்டால், அவர்களை விடத் தாம் சிறந்தவர்கள் என்று கர்வம் கொள்வார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கீழ்மகன்; பட்டித்தன்மையில் தன்னினும் குறைந்தவரைக கண்டானாயின்; அவ்வொழுக்கத்தில் அவரினும் மேம்பட்டுத் தன் மிகுதிகாட்டி யிறுமாந்து நிற்பான்.



மு. வரதராசனார் உரை

கீழ்மக்கள் தமக்குக் கீழ்ப்பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரைவிடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.



G.U. Pope’s Translation

When base men those behold of conduct vile,
They straight surpass them and exulting smile,

 – Thirukkural: 1074, Baseness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.