அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. – குறள்: 1
– அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம்
கலைஞர் உரை
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது.
மு.வரதராசனார் உரை
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
G.U. Pope’s Translation
A, as its first of letters, every speech maintains;
The ‘Primal Deity’ is First through all the world’s domains
– Thirukkural: 1, The Praise of God, Virtues
Be the first to comment