அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. – குறள்: 151
– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்
கலைஞர் உரை
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல், தம்மை
இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே
தலைசிறந்த பண்பாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலம்போல, தம்மை மதியாது தீங்கு செய்தாரைப் பொறுத்தல் தலையாய அறமாம்.
மு. வரதராசனார் உரை
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
Yep.