குருவிரொட்டி இணைய இதழ்

அஃகி அகன்ற அறிவுஎன்ஆம் – குறள்: 175


அஃகி அகன்ற அறிவுஎன்ஆம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
– குறள்: 175

– அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம்



கலைஞர் உரை

யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உணர்வால் நுணுகிப் பொருளாற் பரந்த ஒருவரது கல்வியறிவால் என்ன பயனாம்? அவர் பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் தம் அறிவொடு பொருந்தாத செயல்களைச் செய்வாராயின்.



மு. வரதராசனார் உரை

யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?



G.U. Pope’s Translation

What gain, though lore refined of amplest reach he learn, His acts towards all mankind if covetous desire to folly turn?

 – Thirukkural: 175, Not Coveting, Virtues